வெள்ளி, 13 நவம்பர், 2009

சிரிப்பில் ஜோதிடம்


சிரிப்பிலே பிரதிபலிக்கும் உள்ளங்கள் :::..
உங்கள் சிரிப்பின் தன்மையை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை இலகுவாகக் கூறிவிடுகின்றனர் ஜோதிட வல்லுனர்கள். இங்கே சில சிரிப்பின் தன்மைகளுக்கு ஏற்ப உங்கள் குணங்களை தொட்டுவைக்கிறோம். சோதித்துப்பாருங்கள். சிலர் சிரிக்கும் போது தொண்டையின் ஆழத்திலிருந்து புறப்பட்டு வரவர அதிகரித்துக்கொண்டே போய் கடைசியில் ஒரு புதுப்புன்னகையில் முடியும் இவ்வாறு சிரிப்பவர்கள் உற்சாகம் மிக்கவர்கள் தாராள மனப்பாண்மை கொண்ட உள்ளத்தினர். மிருதுவான சுபாவம் எதிரிகளிடம் அன்பான நடத்தை என்பது இவர்களின் இலக்கணம். எல்லோரிடமும் நாணயமாக நடந்து கொள்ளும் இவாகள் தம்மைப்பற்றி பெருமையாகக் கருதிக்கொள்வார்கள் எதையும் எளிமையாக எடுத்துக்கொள்ளும் இவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் பொறுமை இழந்துவிட மாட்டார்கள்.
சிலர் சிரிக்கும்போது பார்த்திருப்பீர்கள் தொடர்ச்சி அறுந்து விக்கல் போல் விட்டு விட்டுச் சிரிப்பார்கள் சற்று தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் மனம் குழம்பியவர்கள் தம்மிடம் முழு நம்பிக்கை அற்ற இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய சுபாவம் கொண்டவர்கள். ஹா... ஹா... ஹா... என்று உரக்க வாய்விட்டுச்சிரிக்கும் பலரை காண்கின்றோம் இப்படிப்பட்டவர்கள் பேசலாமா என்று முடிவு செய்வதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்பவர்கள் சட்டென்று எதிலும் இறங்கிவிட மாட்டார்கள் ஆனால் இவர் எடுக்கும் எத்தீர்மானங்களும் தவறாகிப்போவதில்லை. எரிமலை குமுறுவது போல் வயிற்றில் இருந்து புறப்படும் சிரிப்பைக் கொண்டவர்கள் பலரைக் காண்கின்றோம். தமது சொந்த சௌகரியத்தில் அதீத அக்கறைகொண்ட இவர்கள் பிறர் வேலைசெய்வதைப் பாராட்டும் அதே சமயம் தாம் அதிகமான ஓய்வை எடுத்தக்கொள்வர்.
இன்னும் ஒருவித சிரிப்பினர் உள்ளனர் இவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு தினறுவார்கள் வாயை இறுக்க மூடிக்கொண்ட போதிலும் மெல்லிய சிரிப்பொலிகள் வெளிப்பட்டவண்ணமே இருக்கும் இப்படிப்பட்டவர்கள் தமமைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர்கள் பிறர் விடையங்களில் தலையை நுளைப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் அறிவுக்குப் பொருந்தாத பல காரியங்களை செய்து கொண்டே இருப்பர். இப்படிப்பட்டவர்களில் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிகமாக காணப்படுவர். சிலர் சிரிக்கும் போது முகம் எல்லாம் சிவந்து விடும் தன்மையினை அவதானித்திருப்பீர்கள் அவர்கள் சுதந்திரமான இயல்பு கொண்டவர்கள் தமமைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் தமக்கு அவசியம் என்று தோன்னினால் சிலவிடையங்களில் விடாப்பிடியாக இருப்பவர்கள். இவர்களில் சிலர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பார்கள் ஏதாவது பிரச்சினை என்று வந்துவிட்டால் உடனடியாக அதற்குத் தீர்வினைக் கண்டு விடுவார்கள்.