வெள்ளி, 29 ஜூலை, 2011

சூரிய ரேகையின் மகத்துவம் -- கை ரேகை சாத்திரம்
கை ரேகை சாத்திரத்தில் சூரிய ரேகை மிகவும் முக்கியமானது .ஒருவருடைய உடல் பலத்தையும் ஆயுளையும் குறிப்பது ஆயுள் ரேகை ,புத்தியை குறிப்பது புத்தி ரேகை , அன்பை குறிப்பது இருதய ரேகை . தலையெளுத்தை குறிப்பது விதி ரேகை ,இவை தவிர உப ரேகைகளில் சூரிய ரேகை முக்கியமனது. இந்த ரேகை ஒருவருடைய புகழ், வசியம் என்பவற்றை குறிக்கும். ஒருவரிடம் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் சூரியனின் கவர்ச்சி விசை இல்லாவிட்டால் வெளி உலகத்திக்கு அவருடைய திறமை தெரிய மாட்டாது.சிலருடைய கைகளில் இந்த ரேகை காணப்படமாட்டாது.அவ்வாறு அமையும் கைகளில் சூரியனின் கவர்ச்சி விசை குறைவாகவே இருக்கும். இனி பல்வேறு வகையான சூரிய ரேகைகளும் அவற்றிக்கான பலன்களையும் பார்ப்போம்.சூரிய ரேகை பல இடங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். ஆயுள் ரேகையில் இருந்து ஆரம்பித்தால் அவர் வாழ்க்கையின் சக்கரத்தில் ரேகை ஆரம்பிக்கும் வயதில் இருந்து முன்னேற்றமும் , விதி ரேகையில் இருந்து சுய முயச்சியால் ஏற்பட்ட முன்னேற்றமும் ஏற்படும்.இருதய ரேகையில் இருந்து ஆரம்பித்தால் மனைவியால் அதிஷ்டம் ஏற்படும்.புத்தி ரேகையில் இருந்து ஆரம்பித்தால் சமஜோசித புத்தியால் வெற்றி கிடைக்கும். செவ்வாய் மேட்டில் இருந்து ஆரம்பிக்கும் ரேகை பல பிரச்சினைகளை வாழ்வில் கொடுக்கும் .சந்திர மேட்டில் இருந்து ஆரம்பிகும் ரேகை நல்ல கற்பனாசக்தியை கொடுக்கும். கவிஞர்களுக்கு இவ்வகையான ரேகை காண‌ப்படலாம்.சூரிய ரேகை ஒருவருடைய திற‌மையையும் ,வெற்றியையும் குறிக்கும். ஒருவருக்கு த‌ங்கு தடை இல்லாத சூரிய ரேகையும், நன்கு அமைந்த சூரிய மேடும் அமைந்தால் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக அமையும்.

சூரிய ரேகையில் தீவுக் குறி காண‌ப்படுவது நல்லது அல்ல.ரேகையின் முடிவில் நட்ச்சத்திர குறி காணப்படுவது மிகவும் அதிஸ்டமானது.பெருக்கல் குறி காணப்படுவது சிறப்பானது அல்ல. சதுர குறி பிரச்சினைகளிருந்து பாதுகாப்பை பெறுவதை குறிக்கும். ஒன்றிற்க்கு மேற்பாட்ட சூரிய ரேகை காண‌ப்பட்டால் பல தொழிலில் ஈடுபாட்டை காட்டுவார்கள். சூரிய ரேகையை குறுக்காக வெட்டும் சந்தர்ப்ப ரேகைகள் சிற‌ந்தது அல்ல. அந்த ரேகை வெட்டும் காலப் பகுதியில் பிரச்சினைகள் ஏற்படும் .திருமண ரேகை சூரியரேகையை வெட்டினால் மண‌முறிவில் முடியலாம். ஆனால் திருமண ரேகை சூரிய ரேகையுடன் இணைந்தால் அதிஸ்டமான மணவாழ்வு அமையும்.
ஏனைய ரேகைகளில் இருந்தோ அல்லது வேறு கிரக மேடுகளில் இருந்தோ புற‌ப்படும் சந்தர்ப்ப ரேகை ஒன்று சூரிய ரேகையுடன் இணைந்தால் அது நல்ல பலன்களையே வழங்கும் . சூரிய ரேகை நன்கு தெளிவாக அமைந்து காண‌ப்பட வேண்டும் . தெளிவில்லாமல் அமைத்த ரேகைகள் முளுமையான பலனை தர மாட்டாது.இந்த ரேகைகள் வயது ஏற‌ ஏற மாற்ற‌ம் அடையலாம். ஒவ்வொருவருடைய தசா புத்தி பலன்களுக்கு அமைய இத்தகைய உப ரேகைகளும் மாற்றம் அடையலாம்.