வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கை ரேகை சாஸ்திரம் ----உங்கள் திருமணம் எப்போது ?கை ரேகை சாஸ்திரத்தில் திருமண ரேகை முக்கியமான ஒரு ரேகை ஆகும் . ஒருவரின் திருமணம் நடைபெறும் காலத்தை இந்த ரேகை குறிப்பிடும் . சிலருக்கு ஒரு அழுத்தமான திருமண ரேகை காணப்படும் ,பலருக்கு இரண்டுக்கு மேற்பட்ட திருமண ரேகை காணப்படலாம் . அவை அவர்களின் அன்பு செலுத்தும் நபர்களை குறிக்கும் . அந்த காலத்தில் ஒருவருக்கு பல மனைவிகள் இருந்தனர் , அதனால் பல திருமண ரேகைகள் இருப்பது மனைவியையும் குறிக்கலாம் , அனால் இந்த காலத்தில் ஒரு மனைவி கிடைப்பதே கடினமான விடயம், அப்படியாயின் பல திருமண ரேகைகள் எதை குறிக்கின்றது ? அது ஒருவருடைய காதல் தோல்வியாக கூட இருக்கலாம் .அல்லது அவர் மிகவும் அன்பு வைத்து இருக்கும் அம்மா , அப்பா ,சகோதரி ,சகோதரர்கள் ஆகவும் இருக்கலாம் .அழுத்தமாகவும் தெளிவாகவும் அமைந்த திருமண ரேகை அவருடைய திருமண காலத்தை குறிக்கும் . அந்த திருமண ரேகை தீவுகள் , சதுரக் குறி ஏனைய வெட்டுக்கள் அல்லாது அமைந்து இருக்க வேண்டும்.திருமண ரேகை மேல் பக்கமாக வளைந்து இருந்ததால் திருமணம் நடை பெறமாட்டாது .திருமண ரேகை ஏனைய பிரதான ரேகைகளை வெட்டாமல் செல்வது நல்லது , சூரிய ரேகையுடன் சேரும் திருமண ரேகையால் நல்ல பணமும் புகழும் மனைவியால் வந்து சேரும் . அந்த மாதிரி சூரிய ரேகையை திருமணரேகையை வெட்டினால் விவாஹரத்து ஏற்படும் . ஆண்களுக்கு வலது கைகளும் பெண்களுக்கு இடது கைகளையும் பார்க்க வேண்டும் . பெண்களின் திருமண ரேகையில் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் பிறப்பார்கள் என்று பார்க்கமுடியும் , திருமண ரேகையில் குறுக்காக வெட்டும் சமாந்திரமான சிறிய ரேகைகள் காணப்படும் , அவை குழந்தைகளை குறிக்கும் . மிகவும் தெளிவான ரேகை ஆண் பிள்ளையும் , மெல்லிய ரேகை பெண் குழந்தையையும் குறிக்கும் . கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ரேகை மிகவும் தெளிவாக இருக்கும .ஆண்களுக்கு இந்த ரேகைகள் தெளிவாக காணப்படுவது குறைவு .

திருமண வயதை கணிக்க இலகுவான முறை உண்டு , இருதய ரேகை அருகில் இந்த ரேகை காணப்பட்டால் 21 தொடக்கம் 25 வயதிலும் திருமணம் நடக்கும் .

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

கை ரேகை சாஸ்திரம் --சுக்கிர வளையம்girdle of venus[சுக்கிர வளையம் ]


சுக்கிர வளையம் ஒரு உப ரேகை ஆகும். சுக்கிர வளையம் உள்ளவர்கள் காம வெறி பிடித்தவர்கள் என்று ஒரு வகையான கருத்து உண்டு அது முழுமையான சரியான கருத்தாக இருக்காது . ஆனால் இந்த வகையான ரேகை இருப்பவர்கள் மிக குறைவான தொகையினர் என்று மட்டும் சொல்லலாம். 10 % ஆனவர்களுக்கு மட்டுமே இந்த வகையான ரேகை காணப்படும் . அதுவும் மிகவும் தெளிவான சுக்கிர வளையம் உள்ளவர்கள் மிக குறைவு . அவ்வாறு தெளிவான சுக்கிர வளையம் அவர்கள் அதிஸ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும். இந்த மாதிரி ரேகை உள்ளவர்கள் கலை நயம் உள்ளவர்கள் , பல புகழ் மிக்க சத்திர சிகிச்சை நிபுணர்களிடம் இந்த வகையான ரேகையை கண்டு இருக்கிறேன் . எனது தலைமை சத்திர சிகிச்சை ஆசிரியரிடம் கூட இந்த ரேகை இருக்கிறது [முக தாடை அறுவை சிகிச்சை நிபுணர் ] . ஆனால் இந்த சுக்கிர வளையம் அரை குறையாக அமைந்தவர்கள் காம வெறியர்களாகவும் , குற்றவாளிகளாகவும் இருப்பார்கள் . சுக்கிர வளையம் திருமண ரேகையை வெட்டினால் அவர்கள் மணவாழ்க்கை போரட்டம் நிறைந்ததாக இருக்கும் . பொதுவாக சுக்கிர வளையம் அமைய பெற்றவர்கள் மிகவும் உணர்ச்சிவகைப்பட்டவர்களாக இருப்பார்கள் . இந்த வளையத்தை ஏனைய உப ரேகைகள் வெட்டாமல் இருப்பது நல்லது . மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு இந்த ரேகைகள் இருந்ததாக இந்திய சாஸ்திரங்கள் கூறுகின்றன , ஆனால் மேல் நாட்டு கை ரேகை ஆய்வாளர்கள் இந்த ரேகையை மிகவும் அதிஸ்டமில்லாததாக குறிப்பிடுகின்றனர் .

வெள்ளி, 29 ஜூலை, 2011

சூரிய ரேகையின் மகத்துவம் -- கை ரேகை சாத்திரம்
கை ரேகை சாத்திரத்தில் சூரிய ரேகை மிகவும் முக்கியமானது .ஒருவருடைய உடல் பலத்தையும் ஆயுளையும் குறிப்பது ஆயுள் ரேகை ,புத்தியை குறிப்பது புத்தி ரேகை , அன்பை குறிப்பது இருதய ரேகை . தலையெளுத்தை குறிப்பது விதி ரேகை ,இவை தவிர உப ரேகைகளில் சூரிய ரேகை முக்கியமனது. இந்த ரேகை ஒருவருடைய புகழ், வசியம் என்பவற்றை குறிக்கும். ஒருவரிடம் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் சூரியனின் கவர்ச்சி விசை இல்லாவிட்டால் வெளி உலகத்திக்கு அவருடைய திறமை தெரிய மாட்டாது.சிலருடைய கைகளில் இந்த ரேகை காணப்படமாட்டாது.அவ்வாறு அமையும் கைகளில் சூரியனின் கவர்ச்சி விசை குறைவாகவே இருக்கும். இனி பல்வேறு வகையான சூரிய ரேகைகளும் அவற்றிக்கான பலன்களையும் பார்ப்போம்.சூரிய ரேகை பல இடங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். ஆயுள் ரேகையில் இருந்து ஆரம்பித்தால் அவர் வாழ்க்கையின் சக்கரத்தில் ரேகை ஆரம்பிக்கும் வயதில் இருந்து முன்னேற்றமும் , விதி ரேகையில் இருந்து சுய முயச்சியால் ஏற்பட்ட முன்னேற்றமும் ஏற்படும்.இருதய ரேகையில் இருந்து ஆரம்பித்தால் மனைவியால் அதிஷ்டம் ஏற்படும்.புத்தி ரேகையில் இருந்து ஆரம்பித்தால் சமஜோசித புத்தியால் வெற்றி கிடைக்கும். செவ்வாய் மேட்டில் இருந்து ஆரம்பிக்கும் ரேகை பல பிரச்சினைகளை வாழ்வில் கொடுக்கும் .சந்திர மேட்டில் இருந்து ஆரம்பிகும் ரேகை நல்ல கற்பனாசக்தியை கொடுக்கும். கவிஞர்களுக்கு இவ்வகையான ரேகை காண‌ப்படலாம்.சூரிய ரேகை ஒருவருடைய திற‌மையையும் ,வெற்றியையும் குறிக்கும். ஒருவருக்கு த‌ங்கு தடை இல்லாத சூரிய ரேகையும், நன்கு அமைந்த சூரிய மேடும் அமைந்தால் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக அமையும்.

சூரிய ரேகையில் தீவுக் குறி காண‌ப்படுவது நல்லது அல்ல.ரேகையின் முடிவில் நட்ச்சத்திர குறி காணப்படுவது மிகவும் அதிஸ்டமானது.பெருக்கல் குறி காணப்படுவது சிறப்பானது அல்ல. சதுர குறி பிரச்சினைகளிருந்து பாதுகாப்பை பெறுவதை குறிக்கும். ஒன்றிற்க்கு மேற்பாட்ட சூரிய ரேகை காண‌ப்பட்டால் பல தொழிலில் ஈடுபாட்டை காட்டுவார்கள். சூரிய ரேகையை குறுக்காக வெட்டும் சந்தர்ப்ப ரேகைகள் சிற‌ந்தது அல்ல. அந்த ரேகை வெட்டும் காலப் பகுதியில் பிரச்சினைகள் ஏற்படும் .திருமண ரேகை சூரியரேகையை வெட்டினால் மண‌முறிவில் முடியலாம். ஆனால் திருமண ரேகை சூரிய ரேகையுடன் இணைந்தால் அதிஸ்டமான மணவாழ்வு அமையும்.
ஏனைய ரேகைகளில் இருந்தோ அல்லது வேறு கிரக மேடுகளில் இருந்தோ புற‌ப்படும் சந்தர்ப்ப ரேகை ஒன்று சூரிய ரேகையுடன் இணைந்தால் அது நல்ல பலன்களையே வழங்கும் . சூரிய ரேகை நன்கு தெளிவாக அமைந்து காண‌ப்பட வேண்டும் . தெளிவில்லாமல் அமைத்த ரேகைகள் முளுமையான பலனை தர மாட்டாது.இந்த ரேகைகள் வயது ஏற‌ ஏற மாற்ற‌ம் அடையலாம். ஒவ்வொருவருடைய தசா புத்தி பலன்களுக்கு அமைய இத்தகைய உப ரேகைகளும் மாற்றம் அடையலாம்.

வியாழன், 28 ஜூலை, 2011

இலவசமாக ஜோதிட பலன்களை அறிய ஜோதிட மென்பொருள்

எனது தேடலின் முடிவில் இந்த ஒரு மென்பொருள் மாத்திரமெ இலவசமாக தர இறக்கம் செய்து பார்க்க முடியும் .இந்த மென்பொருளை பார்க்க தமிழ் எளுதி மட்டும் இருந்தால் போதுமானது .சகல ஜாதக விவரமும் அறிய முடியும்.இது அஸ்ரோ விசன் [astro vision] எனப்படும் பிரபலமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் வழங்கும் சேவை.உங்கள் ஜாதகத்தை அறிய இந்த இணைய தளத்தை கிளிக் செய்யவும்http://www.4shared.com/file/u7kZK9gy/Tamil_astrology_software.html?cau2=403tNull

புதன், 27 ஜூலை, 2011

தமிழ் படம் இலவசமாக பார்க்க


தமிழ் அன்பர்களுக்கு ஒரு நல்ல இணையத்தளம் புது தமிழ் படம் , ஆங்கிலப் படம் ஒன் லைனில் பார்க்கலாம்.மிக வேகமாக இயங்க கூடிய வீடியோ தளம்

இணயத்தள முகவரி

http://www.thiruttuvcd.com/category/new-tamil-movies/

வியாழன், 19 மே, 2011

கண்மணியே…

காற்றோடு வந்த நறுமணமும்
சிறுவலையாக ஆடுமவள்
கூந்தலின் கருவண்ணமும்
கொண்டே கண்டு மகிழுமோ
என் மனமும்தான் ஓர்
மயவுலகில் ஆழ்கடலில்
ஓர் தருணம்?
பாலைவன மணலில்
நட்சத்திர வொளியில் தெரியுதவளது
பதிந்த பாதம் ஒவ்வொன்றும்
தடையங்கள் செல்லுமிடம் யாவும்
இருள் ஒன்றே சூழும் போலும்
எங்கேயடிச் சென்றா யென்கண்மணியே
உன்னையன்றி யென்பொய்
புன்னகையும் விம்மும் எந்நேரமும்!
இடைவிடாது துடிக்கும் இதயத்தின்
இடையே கசியுதடிவோர்
இனந்தெரியாத துன்பம்
குழலின் சோகத்திலுள்ள வோர் ஓலக்
குரல் அதை வருடவே எப்பொழுதும்!
என் நெடு மூச்சில் படும் உன் நினைவுகள்
கடுங்குளிரில் சுகமாக சுடுமனலாகும்!
பண்ணுள் மிகுந்த இசையது என்
கண்ணுள் வடியும் நீரைத்
தன்னோடுக் கரைத்து
தருமோவோர் அடைக்களம்
அதனலை கொண்டு
காற்றில் படர்ந்து
கருத்த இவ்வனத்தில்
கொண்டு சேர்க்குமோ
என்னை உன்னிடம்?
என் கண்மணியே…

திங்கள், 18 ஏப்ரல், 2011

யார் உனது சிறந்த நண்பன் ?உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...


யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.


இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதை‌யில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே.


அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான்.