வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

கை ரேகை சாஸ்திரம் ----உங்கள் திருமணம் எப்போது ?















































































கை ரேகை சாஸ்திரத்தில் திருமண ரேகை முக்கியமான ஒரு ரேகை ஆகும் . ஒருவரின் திருமணம் நடைபெறும் காலத்தை இந்த ரேகை குறிப்பிடும் . சிலருக்கு ஒரு அழுத்தமான திருமண ரேகை காணப்படும் ,பலருக்கு இரண்டுக்கு மேற்பட்ட திருமண ரேகை காணப்படலாம் . அவை அவர்களின் அன்பு செலுத்தும் நபர்களை குறிக்கும் . அந்த காலத்தில் ஒருவருக்கு பல மனைவிகள் இருந்தனர் , அதனால் பல திருமண ரேகைகள் இருப்பது மனைவியையும் குறிக்கலாம் , அனால் இந்த காலத்தில் ஒரு மனைவி கிடைப்பதே கடினமான விடயம், அப்படியாயின் பல திருமண ரேகைகள் எதை குறிக்கின்றது ? அது ஒருவருடைய காதல் தோல்வியாக கூட இருக்கலாம் .அல்லது அவர் மிகவும் அன்பு வைத்து இருக்கும் அம்மா , அப்பா ,சகோதரி ,சகோதரர்கள் ஆகவும் இருக்கலாம் .அழுத்தமாகவும் தெளிவாகவும் அமைந்த திருமண ரேகை அவருடைய திருமண காலத்தை குறிக்கும் . அந்த திருமண ரேகை தீவுகள் , சதுரக் குறி ஏனைய வெட்டுக்கள் அல்லாது அமைந்து இருக்க வேண்டும்.திருமண ரேகை மேல் பக்கமாக வளைந்து இருந்ததால் திருமணம் நடை பெறமாட்டாது .திருமண ரேகை ஏனைய பிரதான ரேகைகளை வெட்டாமல் செல்வது நல்லது , சூரிய ரேகையுடன் சேரும் திருமண ரேகையால் நல்ல பணமும் புகழும் மனைவியால் வந்து சேரும் . அந்த மாதிரி சூரிய ரேகையை திருமணரேகையை வெட்டினால் விவாஹரத்து ஏற்படும் . ஆண்களுக்கு வலது கைகளும் பெண்களுக்கு இடது கைகளையும் பார்க்க வேண்டும் . பெண்களின் திருமண ரேகையில் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் பிறப்பார்கள் என்று பார்க்கமுடியும் , திருமண ரேகையில் குறுக்காக வெட்டும் சமாந்திரமான சிறிய ரேகைகள் காணப்படும் , அவை குழந்தைகளை குறிக்கும் . மிகவும் தெளிவான ரேகை ஆண் பிள்ளையும் , மெல்லிய ரேகை பெண் குழந்தையையும் குறிக்கும் . கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ரேகை மிகவும் தெளிவாக இருக்கும .ஆண்களுக்கு இந்த ரேகைகள் தெளிவாக காணப்படுவது குறைவு .

திருமண வயதை கணிக்க இலகுவான முறை உண்டு , இருதய ரேகை அருகில் இந்த ரேகை காணப்பட்டால் 21 தொடக்கம் 25 வயதிலும் திருமணம் நடக்கும் .